ஒற்றை மனிதனாக தீ யில் இருந்து 5 சிறுவர்களை காப்பாற்றிய டெலிவரி மேன்… ஹீரோவாக கொண்டாடும் நெட்டிஸின்..!

பிஸ்ஸா விநியோகம் செய்வதற்கு சென்ற இடத்தில் நெருப்பு ஒரு வீட்டில் பற்றி ஏரிவதை கண்டு  நிக் போஸ்டிக் என்ற 25 வாலிபர்   தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு நெருப்பு பிடித்த வீட்டிற்குள் சென்று அங்கு இருந்த சிறுவர்களை காப்பாற்றியுள்ளார்.

அமெரிக்காவின் லூசியான்னா மாகாணத்தில் லோபியட் என்ற இடத்தில்  இந்நிகழ்வு நடந்துள்ளது. பிஸ்ஸா விநியோகம் செய்வதற்காக சென்ற போது ஒரு வீட்டில் நெருப்பு பற்றி எரிவதை பார்த்து அந்து வீட்டில் உள்ளவர்களை  காப்பாற்ற சென்றுஉ ள்ளார். அப்போது அங்கு நான்கு  சிறுவர்கள் மெத்தை மீது தூங்கி கொண்டிருந்தனர். நெருப்பு பற்றி இருப்பது அறியாது இருந்துள்ளளனர். இதைத் பார்த்ததும் அவர் சிறுவர்களை காப்பற்றி வீட்டின் வெளியே அமரச்செய்துள்ளார்.

அச்சிறுவர்கள் தங்கள் இன்னொரு 6 வயது சகோதரர் உள்லேயே  இருப்பதாய் தெரித்துள்ளார்கள். உடனடியாக சற்றும் தாமதிக்காமல் அச்சிறுவனையும் காப்பாற்றியுள்ளார். அப்போது அவருக்கு மூச்சு விடுவதற்கு சிரமமான நிலையிலும் ஐந்து சிறுவர்களை காப்பற்றி   மனிதாபிமானதுடன் தன் உயிரையும் பொருட்படுத்தாதது  கப்பாற்றி உள்ளார் . இதனால் அவருக்கு கையில் தீ காயங்கள் எற்பட்டன.

தீ அணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்து சிறுவர்களையும் நிக் போஸ்டிக்கையும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது இந்த காட்சி வைரல் ஆகி அமெரிக்கா மக்கள் தங்களது உண்மையான ஹீரோ என்று கொண்டாடிவருகின்றனர்.