இவ்வளோ பெரிய பென்சில் ஷார்ப்பனரா… வலைத்தளங்களில் வட்டமடிக்கும் அந்த காலத்து பொக்கிஷம்….!

பள்ளி பருவத்தில் அனைவரும் மிகவும் விரும்பும் ஒன்றாக உள்ள நமது எழுதுகோல், அழிப்பான், கூர்மையாக்கி மற்றும் அளவுகோல் வைத்திருக்கும் பெட்டியை பாதுகாப்போம். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும் புதிதாக வாங்கும் புத்தகம்,புதிய சீருடை, புதிய புத்தக பை, புதிய எழுதுகோல் அடங்கிய பெட்டகம் போன்ற படிப்பிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் புதியதாக கிடைக்கும் போது உற்சாக மிகுதியால் துள்ளி குதிப்போம். புதிதாக திறக்கப்படும் புத்தகத்தில் ஒரு வித வாசனை வரும் இதை தோழர்களுடன் சொல்லி மகிழ்வோம் .

பேனா பல விதங்களில் வந்தாலும் என்றுமே 90-ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது ஹீரோ பேனா தான். பார்த்து பார்த்து நம்முடைய பொருட்களை வைத்திருந்தாலும் தோழர்கள் கேட்டால் புது பேனா அல்லது அழிப்பான் உடனே கொடுத்து விட வேண்டும் என கட்டளையிடுவோம். இப்படி நம் பள்ளி நாட்களை நனைவுபடுத்தும் ஒரு அதிசய ஷார்ப்பனரை காண இருக்கிறோம். பென்சில் கொண்டு எழுதும் போது அது மழுங்கி எழுத்துவதற்கோ அல்லது படம் வரைவதற்கோ நாம் எதிர்பார்த்தது மாதிரி வராத காரணத்தினால் அதை கூர்மையாக்குவோம். அதனை முதலில் கண்டுபிடித்தவர் பெர்னார்ட் லாசிமொன்.

1828-ல் பிரெஞ்சு கணிதவியலார் பெர்னார்ட் லாசிமொன் என்பவர் ஷார்ப்னருக்கான காப்புரிமை பெற்றார். பிறகு படிப்படியாக அவரவர் விருப்ப படியும் வசதிக்கேற்பவும் மாறுபாடு செய்து நாம் தற்போது உபயோகப்படுத்தும் கூர்மையாக்கியாக வடிவம் எடுத்துள்ளது.இங்கே காணொலியில் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய வின்டேஜ் பென்சில் கூர்மையாகும் கருவி உள்ளது. அதனை இங்கே காணலாம்…