வாழ்க்கையிலேயே இப்படி யாரும் கார் ஓட்டி பார்த்திருக்க மாட்ட்டீங்க… சினிமாவை மிஞ்சிய காட்சி..!

      சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.

   வாகனத்தை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு அவர் ஏற்கனவே தூங்கி ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதையெல்லாம் மீறி டிரைவர் பயண களைப்பில் இருப்பார். பேருந்தில் பயணிகள் தூங்கினால் அது வெறுமனே கடந்து போகக் கூடிய செய்திதான். அதுவே ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தியாகி விடும். சிலர் எப்போதுமே ரிஸ்கான பயணத்தை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள்.

  இங்கேயும் அப்படித்தான். ஒருவர் வேற லெவலில் கார் ஓட்டுகிறார். அதிலும் அவர் போலீஸ்காரர். வழக்கமாக கார் சாலையில் மட்டும் செல்வதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கே இவர் விட்டலாச்சாரியார் படங்களில் வரும் மேஜிக்கைப் போல் டிராபிக்காக இருக்கும் சாலையில் பக்கச்சுவர்களின் வழியே ஏறி திரும்பி ரோட்டிற்கு வருகிறது. பார்க்கும் நமக்கே இது நிஜமா அல்லது, வீடியோ கேமா எனச் சந்தேகம் வருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.