நடிகர் விவேக்கின் பூர்வீக கிராமம், வீடு இதுதான்! எப்படி இருக்குன்னு பாருங்க…

             தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நகைச்சுவையால் தனி இடம் பிடித்தவர் விவேக். ஒருகட்டத்தில் விவேக்கின் கால்ஷிட் வாங்கினால் படம் ஹிட் என்னும் சூழல் இருந்தது. பரோட்டா சூரி, யோகிபாபு என அடுத்தடுத்த தலைமுறை காமெடியன்கள் வந்துவிட்டாலும்  விவேக் தன் மாஸை அப்படியே தக்கவைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் மாரடைப்பில் பலியான சம்பவம் அனைவரையும் உலுக்கிவிட்டது என்றே சொல்லலாம். தன் சாவுக்கு முன்புகூட கரோனா த்டுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வூட்டினார். 

   நகைச்சுவை கேரக்டர்களை ஒருபக்கம் செய்துகொண்டே இன்னொரு புறத்தில் தேர்ந்த குணச்சித்திர பாத்திரங்களையும் வெளிப்படுத்துவார் விவேக். 1987ல் வெளியான மனதில் உறுதி வேண்டும் மூலம் தமிழ் சினிமாவுக்கு விவேக் அறிமுகமானார். சமீபத்தில்கூட விஸ்வாசம் படத்தில் தல அஜித்தோடு சேர்ந்து நடித்தார். தல, தளபதி இருவரோடும் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் விவேக் இருதரப்பு ரசிகர்களுக்கும் பேவரட்டாக இருந்தார்.

  நடிகர் விவேக்கின் பூர்வீக வீடு, சொந்த கிராமம் பற்றிய காட்சிகள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் நடிகர் விவேக்கின் பூர்வீக ஓட்டு வீடு இன்றும்கூட பழமை மாறாமல் அப்படியே உள்ளது. அந்த வீட்டில் தான் விவேக்கின் அப்பா சிவ அங்கையா பாண்டியன் பிறந்தாராம். நடிகர் விவேக் ஊரெல்லாம் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வூட்டுவது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். அதேபோல், அவரது அப்பா பிறந்த பூர்வீக வீட்டிலும், அந்த ஓட்டு வீட்டிற்குள்ளேயே மரங்கள் நிற்கிறது. இப்போது அந்த வீடு இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.