தாய்பாசத்தில் கோழி செஞ்ச வேலையைப் பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க.. பாசத்தின் உச்சத்தை சொல்லும் காணொளி..!

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான்…ஒரு கோழி தாய்ப்பாசத்தில் செய்யும் செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

ஆயிரம் பேர் நம்மேல் பாசம் வைத்தாலும் பெற்ற தாய் நம் மீது வைத்திருக்கும் பாசத்துக்கு அதில் ஈடுசொல்லவே முடியாது. அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அம்மாக்கள் எப்பவுமே ஸ்பெசலாகி விடுகின்றனர். இங்கும் அப்படித்தான் தன் குஞ்சுகள் மீது பாசம் காட்டும் ஒரு கோழியின் வீடியோ எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காது.

நாட்டுக்கோழி ஒன்று தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருந்தது. இதை நோட்டம்விட்ட பருந்து ஒன்று வேகமாக வந்து கோழிக்குஞ்சைத் தூக்கிச்செல்ல முயன்றது. இதைப் பார்த்துவிட்ட கோழி பருந்தைப் பிடித்து இழுத்து அதன் கழுத்தில் தன் காலை வைத்து நசுக்கியது. பருந்தால் அதில் இருந்து மீண்டுவர முடியவில்லை.

ஒருகட்டத்தில் பருந்து டயர்ட் ஆக விடாத கோழி அதை தன் கூர்மையான அலகால் தொடர்ந்து குத்தியது. இதில் பருந்து நிலைகுலைந்து ஒருகட்டத்தில் கோழியை சமாளிக்கவே முடியாமல் எழுந்து பறந்தது. குறித்த இந்த வீடியோ தாய்ப்பாசம் என வந்துவிட்டால் எவ்வளவு பலம் வாய்ந்த நபராக இருந்தாலும் வீழ்த்திவிடலாம் என்பதைக் காட்டுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.