தன் உயிரையே பணயவைத்து மகன்களைக் காப்பாற்றிய தந்தை… மனதை உருகவைக்கும் அற்புதக் காட்சி..!

பாசத்துக்கு முன்பாக பணம் ஒரு விசயமே இல்லை. இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும்தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

  பணம் என்பது வெறும் காகிதம் தான். என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை, மகன்பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதமான விசயம்.

   அதிலும் தன் பிள்ளைகளுக்கு ஒரு ஆபத்து வரும்போது தந்தை தன் உயிரையே பணயம் வைத்தாவது அவர்களைக் காக்கத் துடிப்பார். இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஓமன் நாட்டில் பக்லா மாவட்டத்தில் கோடை மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் காட்டாற்று வெள்ளத்தில் இரு குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். இவர்களின் தந்தை அல்மின் நசீர் இதைப் பார்த்தார். அவர் உடனே தீயணைப்புத்துறையையோ  வேறு யாரையுமோ எதிர்பார்க்காமல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தன் மகன்களை தனியொருவராக போராடி மீட்டுக்கொண்டு வந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு அல்மீன் நசீர் போராடும் போதும் சிலர் வேடிக்கை மட்டுமே அங்கு பார்த்துக் கொண்டிருந்ததுதான் வேதனையான விசயம். 

இதோ அந்தத் தந்தையின் பாசப் போராட்டத்தையும், மனோதிடத்தையும் இந்த வீடியோவில் பாருங்கள். 

https://youtube.com/watch?v=WmcfMBEpVBQ