டான் பட டைரக்டர் தளபதி விஜயோடு நடித்திருக்கிறார் பார்த்திருக்கிறீர்களா? அடடே இந்தப் படமா? அதிலும் இந்தக் காட்சியா..?

        இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான விஜய்….இப்போது விஜயின் அப்பா என தன்னை அறிமுகப்படுத்தும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

      நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள். இதில் விஜயின் மகளான திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் வீராங்கணையாவார். இப்போது அவரது மகன் வெளிநாட்டில் படிக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இப்போது ஓடிடியிலும் அந்தப் படம் வெளியாகி உள்ளது. 

   அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. டாக்டருக்குப் பின் அதேபோல் காமெடி தூக்கலாகவும், கிளைமேக்ஸில் செண்டிமெண்டையும் புகுத்தி இந்தப் படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவரத்தி. அதிலும் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயனின் கேரக்டருக்கு தன் பெயரையே படத்தில் சூட்டியிருக்கிறார்.

    டைரக்டர் சிபி சக்கரவரத்தி இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். தான் தளபதி விஜயை வைத்து இயக்கிய மெர்சல் படத்தில் சிபி சக்கரவர்த்தியையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்துள்ளார் அட்லி. விஜய் பிரஸ் மீட்டில் நிருபர்களிடம் பேசுவது போல் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் நிருபராக விஜய் முன்பு மைக்கை நீட்டுவார் சிபி சக்கரவர்த்தி. அடடே டான் பட இயக்குனர் மெர்சலில் நடித்துள்ளாரா என நெட்டிசன்கள் இதை தீயாகப் பரப்பி வருகின்றனர்.