சுறா படத்தில் தளபதி விஜயுடன் நடித்த பிரபல அம்மா நடிகையா இது.. அவரின் இப்போதைய நிலமைத் தெரியுமா…?

  திரைப்படங்களில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தான் என்றில்லை. சின்ன, சின்ன கேரக்டர்கள் செய்தாலும் சிலர் ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடுவார்கள். நடிகை சுஜாதா சிவகுமாரும் அவர்களில் முக்கியமானவர்.

  கிராமத்து மொழி பேசி, வெள்ளந்தியான கேரக்டரில் நடிக்கும் இவரது நடிப்பு ரொம்பவும் பேமஸ். திரைப்படங்கள் மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். இவருக்கு உலகநாயகன் கமல்ஹாசனின் விருமாண்டி படம் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. அந்தப்படத்தில் இவர், பசுபதியின் மனைவியாக நடித்தார். பருத்திவீரன் படத்திலும் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. கருவி, பசங்க,, ஏழாம் அறிவு, வீரம், விஸ்வாசம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சுறா படத்திலும் இவர் நடித்திருந்தார்.

  ஆனால் சமீபகாலமாக சுஜாதா சிவகுமாரை சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை. இதைப்பற்றி சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கும் அம்மணி, ‘எனக்கு முதலில் குடும்பம். இரண்டாவது தான் சினிமா. அந்தவகையில் தமிழில் பல படங்களில் ஏன் பல நடிகர்களுக்கும் கூட அம்மாவாக நடித்துவிட்டேன். இனியும் நடிக்க ஆசை தான். 

ஆனால் இயக்குனர்கள் யாரும் அழைக்கவில்லை. யாராவது அழைப்பார்களா எனக் காத்திருக்கிறேன்.”என்றார். பிரபல அம்மா நடிகை வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவது தெரிந்து, அவரது ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.