கூகுள் குட்டப்பா படத்தில் ரோபோவாக நடித்தது இவர்தான்.. 1000 ரூபாய் கிடைத்தால் வளர்ந்திருப்பாரே? இவர் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா?

  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கூகுள் குட்டப்பா. கே.எஸ்.ரவிக்குமார் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் கூகுள் கட்டப்பா கேரக்டரில் ரோபோ ஒன்று நடித்திருக்கும்.

 ரோபோவாக அந்தப் படத்தில் நடித்தது வேறு யாரும் இல்லை. இளம் பாரதி என்பவர்தான்! மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த இந்தப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சபரி, சரவணன் இருவரும் சேர்ந்தே எடுத்துள்ளனர். இதில் லாஸ்லியா, தர்ஷன், யோகிபாபு, மனோபாலா என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

   இதில் ரோபோவாக வந்த இளம்பாரதி சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில், “ஆவடி பக்கம் கிராமம் என்னோட ஊரு. சென்னையைச் சேர்ந்த பொம்மிங்குற பெண்ணை கல்யாணம் பண்ணிருக்கேன். என் கூடப் பிறந்தவங்க 5 பேர். அதில் இருவர் மட்டும் தான் குள்ளமாக இருப்போம். நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்வதுதான் இதற்குக் காரணமாகிறது. பத்து வயசுக்கு மேல தான் எங்களுக்கு வளர்ச்சி நின்னுப்போச்சுன்னே எங்களுக்குத் தெரியும். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஊசி போட்டால் வளரலாம் எனச் சொன்னார்கள். ஆனால் அந்த ஊசி வாங்கிப் போடும் அளவுக்கு என் வீட்டில் வசதி இல்லை.

   என் மனைவியும் அப்படித்தான். ஊசி போட காசில்லாமல் போடவில்லை. முதலில் ஒரு சினிமா கம்பெனியில் கிளார்க்காக வேலை செய்தேன். அப்புறம் சீரியல், அதற்குப்பின்னால் தான் சினிமாவுக்கு வந்தேன். எனக்கு நடனம் ரொம்பப் பிடிக்கும். ஆனால் உயரம் கம்மி என்பதால் குழு நடனத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இயக்குனர் ஆகவேண்டும் என்பதும் என் ஆசை!”என மனம் திறந்துள்ளார். 

pic2