ஆட்டோ ஓட்டுனரை வைத்து செய்த பொடியன்கள்… குட்டி சாத்தானை விட படு மோசமாக இருக்காணுங்களே..!

பொதுவாகவே குழந்தைகள் அதிக சேட்டை செய்பவர்கள் தான். அவர்களின் சேட்டை பல நேரங்களில் நம்மை ரசிக்க வைத்தாலும், சில நேரங்களில் நம்மை கோபப்படுத்துவதும் உண்டு. இங்கேயும் அப்படித்தான் ஒரு ஆட்டோக்காரரை சில பொடியர்கள் சேர்ந்து கலாட்டா செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த அந்த வீடியோவில் பின்பக்க இருக்கை வெளியில் தெரியாமல் அடைக்கப்பட்ட ஆட்டோ ஒன்றை சாலையில் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் டீ குடிக்கப் போனார். இந்நிலையில் சாலையோரம் நின்ற நான்கு பொடியர்கள் விளையாடுவதற்காக இந்த ஆட்டோவில் ஏறினார்கள். பொடியர்கள் ஆட்டோவின் பின் இருக்கையில் இருப்பது தெரியாமல் டீ குடித்துவிட்டு வந்த ஆட்டோக்காரர் வந்து ஆடோவை எடுத்தார்.

பொடியர்களும் சத்தம் எழுப்பாமல் ஆட்டோவில் வந்தனர். ஒருகட்டத்தில் பின் பக்க இருக்கையைத் திறந்துவிட்டு ஒரு பொடியன் முதலில் குதிக்கிறான். டிரைவர் பதறிப்போய் இறங்கி ஓடிவருகிறார். அப்போதுதான் குழந்தை விளையாட்டுக்கு குதித்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் ஆட்டோவின் கதவைத்திறந்த போது உள்ளே மேலும் மூன்று சிறுவர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவராக இறக்கி அவர் கீழே தள்ளிப்போட அதற்குள் இரு பொடியர்கள் சேர்ந்து ஆட்டோவை ஓட்ட முயற்சித்தார்கள். உடனே ஆட்டோக்காரர் ஓடியே போய் ஆட்டோவை நிறுத்தினார். கடைசியில் ஆட்டோ டிரைவருக்கு பயந்து நான்கு பொடியர்களும் ஓடிவிட்டனர்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்களைவிட குட்டிசாத்தானே பரவாயில்லை போல என கமெண்ட் செய்துவருகின்றனர்.