யாருடா இந்த போட்டியெல்லாம் கண்டுபிடிக்கிறது? இந்தப் பொண்ணும், மாப்பிள்ளையும் ரொம்பப் பாவம்தான் போங்க…

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட திருமணத்தில், மணமக்களுக்குள் சொந்தங்கள் சேர்ந்து நடத்திய விளையாட்டுப் போட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

     இன்று எல்லார் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டது. அதிலும் ஸ்மார்ட் போன்களில் பப்ஜி கேம் ஆடும் இளசுகள் இன்று ஏராளம். இந்த விளையாட்டை ஆர்வத்தோடு விளையாடுபவர்களில் பலர் அதற்கு அடிமைகளாகவே ஒருகட்டத்தில் மாறிவிடுவதையும் பார்க்க முடிகிறது. ஆனால் இங்கே அப்படியான செல்போன் கேம்களுக்கு குட்பை சொல்லிவிட்டு சொந்தங்கள் சேர்ந்து மணமக்களுக்குள் போட்டி நடத்துகின்றனர்

  அதாவது, தேங்காயை உடைத்தல், பலூனை யார் முதலில் ஊதுகிறார்கள், கேள்விக்கணைகள், என பல்வேறு போட்டிகளை நடத்துகின்றனர். இப்படியெல்லாம் போட்டி நடத்துவதன் மூல ஒருவகையில் மணமக்களுக்குள் கூச்சம், தயக்கம் போய் அன்னியோன்யம் பெருகும் என்பதாலேயே இந்த ஏற்பாடாம். எது எப்படியோ, பொண்ணும், மாப்பிள்ளையும் பாவம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.