சபாஷ் சரியான போட்டி… கோவில் திருவிழாவில் தமிழக பறையும் கேரள செண்ட மேளமும் கதகளி ஆடிய சம்பவம்….!

இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கலைகளில் நாட்டம் இருக்கும். ஆய கலைகள் 64-ல் இசையும் ஒரு கலை. இசையால் உலகை கட்டிப்போட்டவர்கள் ஏராளம். உலக அளவில் அதிகமாக இன்றுவரை பீத்தோவனின் இசைக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்கின்றனர்.

இந்தியாவில் அதிகமாக கொண்டாடப்படுவர்களில் சாஹிர் ஹுசைன், இவர் தபேலா வாசித்தால் மக்கள் கேட்டு கொண்டே இருப்பார்கள். இளையராஜா, ஏ.ஆர் .ரஹ்மான் போன்ற இசை ஜாம்பாவான்களின் இசையால் மயங்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். மேற்கத்திய இசையுடன் நமது பாரம்பரிய இசையும் கலந்து ஒலிக்கும் பாடல்களை மக்கள் விரும்புவார்கள்.

சமீபத்தில் வெளிவந்த கர்ணன் படத்தில் இடம் பெற்ற கண்டா வர சொல்லுங்க……பாடலை கோடிக்கணக்கான மக்கள் கேட்டு ரசித்தார்கள். இந்த பாடல் முழுக்க நமது பாரம்பரிய பறை மற்றும் கொட்டு மேளம் கொண்டு இசை அமைத்திருப்பார் சந்தோஷ் சிவன் அவர்கள்.

நம் பாரம்பரிய இசையான பறையை கொண்டு இசைக்கப்படும் இசையானது திருவிழாக்கள், பண்டிகைக் காலங்களில், கோவில்களில் இசைக்கப்படும். ஒரு சில திரைப்படங்களில் பறையால் இசைக்கப்பட்ட பாடல்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இந்த காணொலியில் இடம் பெற்ற கேரளத்து செண்டை மேளமும் நமது பறையும் ஒரு சேர ஒலிப்பது சுவாரசியமாக உள்ளது. போட்டியென்றால் இது தான் போட்டி யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்தனர். இசையால் போட்டி போட்ட குழுவினர், எது பெருசுன்னு அடிச்சு காமிக்க வைகை புயல் வடிவேலுவின் காமெடி காட்சிகள் உண்மையான போட்டியாக மாறி இணையத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.