முகூர்த்தப்பட்டு… கழுத்து நிறைய நகை… செம மாஸாக ஆட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு..!

                  திருமண வீடுகள் தான் உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஹாட் ஸ்பார்ட். கடந்த இருவருடங்களாக கொரோனா பயத்தால் பெரும்பாலும்  திருமணங்கள் மிகவும் சிம்பிளாகவே நடந்து வருகிறது. இருந்தாலும் நெருங்கிய உறவினர்களை அழைக்கத் தவறுவதில்லை. இப்போது அனைவரும் தடுப்பூசி போட்டு கரோனா தொற்றும் கட்டுக்குள் வந்துவிட்டதால் திருமண வீடுகள் திருவிழா போல் நடந்து வருகிறது. 

   என்னதான் திருமணங்களில் மாப்பிள்ளை, பெண் தான் முக்கியஸ்தர் என்றாலும் சொந்தங்கள் சூழும்போது அது தரும் மகிழ்ச்சியே தனி தான். வசீகரா படத்தில் வரும் மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல பாடல் திருமண நாளில் சொந்தங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும். இப்படியான திருமணங்களில் இப்போதெல்லாம் செம மாஸாக நடனம் ஆடுவதும் பேஷன் ஆகிவிட்டது.

  அதிலும் இப்போதெல்லாம் கல்யாணப் பெண்ணும், மாப்பிள்ளையும் சேர்ந்து ஆட்டம் போடுவது பேஷன் ஆகிவிட்டது. அந்தவகையில் இதோ இங்கேயும் ஒரு கல்யாணப் பொண்ணு, தன் திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்கும்வகையில் செம மாஸாக ஆட்டம் போட்டுள்ளார். அதுவும், கண்ணில் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு, முகூர்த்தப்பட்டில் கழுத்து நிறைய ஆபகரணங்களோடு செம மாஸாக ஆட்டம் போட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.