ஏர்போர்ட்டில் நடந்த தந்தை மகள் பாசப்போராட்டம்.. சினிமாவை மிஞ்சும் காட்சி..!

அன்பு அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. தாய் தனது குழந்தைகளின் மேல் காட்டுவதும் விலங்குகள் தங்கள் குட்டிகளின் மேல் காட்டுவதும் பாசம். இந்த பாசத்தை வெறும் வார்த்தைகளால் அளவிட முடியாது. பூமியும்…. தன்னில் வாழும் அனைத்து உயிரினங்களையும் ஒரு தாய் போல் தாங்கி உணவளித்து பாதுகாக்கிறது.

தாய் மற்றும் தந்தையின் அன்பு சற்று வித்தியாசப்படும். தாய் குழந்தைகளிடம் கருணையுடனும், அன்பாகவும் இருப்பார்கள். தந்தையானவர் சிறந்த வழிகாட்டியாக கண்டிப்புடன் எதிர்காலத்தை மனதில் கொண்டு சற்று கடினமாக இருப்பார், அதுவும் மகன் என்று வரும் போது துளி அளவு கூட மாறாமல் அன்பை மிகவும் கண்டிப்புடன் வெளிப்படுத்துவார். இத்தகைய அன்பை பெரும்பாலும் மகன்கள் புரிந்து கொள்ள தவறிவிடுகின்றனர். அவர் தனக்கு பிறகு இந்த உலகத்தில் தனியாக போராடி வாழ்வதற்கான வழிமுறைகளை மறைமுகமாக கற்று தருவதை தான்……. தந்தையான பிறகே புரிந்துகொள்கின்றனர். தந்தை என்ன தான் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் மகளிடம் அவ்வாறு நடந்து கொள்வது இல்லை. பெண் குழந்தைகளை தனது இன்னொரு அம்மாவாக நினைத்து பாசமுடன் வளர்க்கும் தந்தையும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னொரு வீட்டிற்க்கு போகிறவள் என்ற காரணத்தினாலோ என்னவோ தந்தையானவர் மகன்களை காட்டிலும் மகளிட்ம் மென்மையாகவும், அன்பாகவும் நடந்து கொள்வார்கள் என்பது உலக நியதி.

வெளிநாட்டில் இருந்து வரும் தந்தையை வரவேற்பதற்காக மகள் காத்திருக்கிறார். தந்தை அருகில் வந்தும் நடுவில் உள்ள இரும்பு வேலியால் அவரை தொட முடியாமல் போக தந்தை சிறுமியை வேலியை தாண்டி தூக்கி கொஞ்சி மகிழ்கிறார். இந்த காணொலி சமூக வலைதளவாசிகளை அன்பில் திக்கு முக்காட வைத்துள்ளது. உங்களுக்காக அந்த காணொலி…..