நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்கனும்… மணமேடையில் கண் கலங்கிய மணமகன்…!

திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தார் சுற்றம் சூழ இருந்த போது மண மேடையில் மணமகன் கண்கலங்கியது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாகியது. திருமண விழாவின் போது உறவினர்கள், நண்பர்கள், உற்றார், சுற்றத்தார் என திருமணத்திற்கு வரும் அனைவரும் பரிசு பொருட்கள் வழங்குவார்கள். அனைவருமே பரிசு பொருட்கள் வழங்கினாலும் காலம் செல்ல செல்ல இன்னார் இன்னதை செய்தார் என்பது காலப்போக்கில் மனதில் இருந்து மறைந்து விடும். ஆனால் சிலரின் அன்பளிப்பு காலங்கள் பல கடந்தாலும் காலம் முழுக்க நினைவில் இருக்கும்.

தற்போதுள்ள காலங்களில் திருமண விழாவிற்கு வருகை தரும் நண்பர்கள் அன்பளிப்பு என்ற பெயரில் பிராங்க் பண்ணுவது சகஜமாகி போனது. ஒரு சிலர் மணப்பெண் முகம் சுளிக்கும் வகையில் நாகரிகம் அற்று நடப்பதும் உண்டு. அது அவர்கள் பழகும் உயிர் நண்பர்களை பொறுத்தது.

நண்பேண்டா…… என்ற சொல்லுக்கு சொல்லாக இல்லாமல் உண்மையில் நண்பனை புரிந்து கொண்டு அந்த நண்பர் உள்ளம் உருக செய்யும் நண்பர்களும் இருக்கிறார்கள். பெரியவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளில் ஓன்று வாழ்க்கையில நாலு நல்ல மனுஷங்கள சம்பாதிச்சு வைத்திருக்கன்ணும் என்று இல்லை என்றால் உருப்படியாக ஒரு நல்ல நண்பனையாவது வைத்திருக்க வேண்டும் என்று, ஏனென்றால் அது அவர்கள் வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக கற்றது ஆகும். இந்த காணொலியிலும் மணமகனை அன்பளிப்பினால் ஆனந்த கண்ணீர் வர வைத்த நண்பர்களை சமூக வலைதளநண்பர்களும் பாராட்டி வருகின்றனர். உங்களுக்காக அந்த காணொலி கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.