மழலை மொழியில் திருக்குறள் கூறும் சிறுமி…. இந்த சின்ன வயசுல என்ன அழகா சொல்லுறாங்க பாருங்க..!

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் பெரியோர்கள்……..ஒரு குழந்தை பிற் காலங்களில் என்னவாக வரும் என்பதை சிறு வயதில் அவர்களின் ஆர்வம் மற்றும் திறமைகளை வைத்து ஆசிரியர்கள் கூறி விடுவார்கள்…..

குரு துரோணாச்சாரியார் ஒரு முறை அம்பு மற்றும் வில்லினை எடுத்து கொண்டு வந்து தமது மாணவர்களிடம் கொடுத்து விட்டு மரத்தில் என்ன தெரிகிறது என்று கேட்க மாணவர்கள் அவரவரின் கருத்துக்களை கூறினார்கள்….ஆனால் அர்ஜுனனோ மரத்தில் இருந்த கிளி தெரிவதாக பதில் அளித்தான். மேலும் மரத்தினால் செய்யப்பட்ட கிளியின் கண்கள் தெரிவதாக பதிலளிக்க குரு துரோணாச்சாரியார் அம்பினை எய்யுமாறு கூற அர்ஜுனன் அம்பினை கிளியின் கண்ணை நோக்கி செலுத்தினார். அந்த அம்பானது கிளியின் கண்ணை துளைத்து கொண்டு வெளியேறியது. அப்போதே குரு துரோணாச்சாரியார் தனது சிஷ்யன் பின்நாளில் வில்லாற்றல் பொருந்திய வீரனாக வருவார் என்று யூகித்தார். அதே போல் வில்லிற்கு விஜயன் ஆனார் அர்ஜுனன்.

குழந்தைகள் தங்கள் திறமைகளை சிறு வயதில் இருந்தே வெளிப்படுத்தி வருவார்கள். சில குழந்தைகள் நோட்டு புத்தகம் போன்றவற்றில் ஓவியம் வரைவார்கள், சில குழந்தைகள் பாடலை ராகத்தோடு படுவார்கள். ஒரு சில குழந்தைகள் நடனத்தில் ஆர்வம் கொண்டு பாட்டிற்கு நடனம் ஆடுவார்கள்.

இங்கு ஒரு சிறுமி அங்கன்வாடியில் கற்று கொடுத்த பாடத்தினை மழலை மொழியில் பிழை ஏதும் இல்லாமல் கூறுகின்றார். அதிலும் தனி சிறப்பு திருக்குறளை அழகு தமிழில் மழலை மொழியில் கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். சிறுமியின் தேனிசை குரலில் திருக்குறளை கேட்பவருக்கு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். அந்த சிறுமியின் மழலை மொழியின் காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது……..