போன பிறவியில பெரிய ராஜாவா பிறந்திருக்குமோ..? இந்த பறவைக்கு வந்த சொகுசைப் பாருங்க…

     பறவைகள் மனித வாழ்வோடு பிரிக்கவே முடியாதவை. இன்று நமக்கு பருவம் தவறாமல் நல்ல மழையெல்லாம் பொழிகிறதே அதற்கு பறவைகளும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

  மரங்களில் இருந்து பழங்களைச் சாப்பிட்டு பறவைகள் போடும் எச்சங்களே மண்ணில் விழுந்து மரமாகிறது. அது மட்டும் இல்லாமல் பறவைகள் பறக்கும் காட்சிகளே நம்மை மிகவும் ரசிக்கவைக்கும். பார்க்கவே அது மிகவும் ரம்மியமாக இருக்கும். இவ்வளவு ஏன் விஞ்ஞான வளர்ச்சிக்கும் கூட பறவைகள் காரணமாக இருந்திருக்கிறது.

  பறவையைக் கண்டான்…விமானம் படைத்தான் என பாடல்வரிகளே அதற்குச் சாட்சி. அந்தவகையில் பறவைகளைப் பார்ப்பதே நமக்கு கொள்ளைப் பிரியத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் பறவைகள் வானத்தில் கூட்டமாகப் பறந்தால் நாமும் ரசித்து பார்ப்போம். இங்கேயும் அப்படித்தான் ஒரு பறவை சிறகை விரித்துப் பறக்கிறது. இன்னொரு பறவை அதன்மேல் ஒய்யாரமாக ஏறி அமர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் தன் உடல் உழைப்பையே செலுத்தாமல் ஓசியில் ஜாலி உலா வருகிறது. ஒருவேளை இந்தப் பறவை போன ஜென்மத்தில் அரசியல்வாதியாகப் பிறந்திருக்குமோ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்களேன்.