நாடி நரம்பெல்லாம் இசை உணர்வு இருந்தால் தான் இது சாத்தியம்.. இந்த சின்ன பையன் எப்படி உருமி மேளம் அடிக்குறான் பாருங்க…!

                              திறமை என்பது  வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான்.  ஒரு சாமானிய  சிறுவனின்   திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

  கோயில் திருவிழா ஒன்றில் நையாண்டி மேளம் புக் செய்து இருந்தனர். இதில் பம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் நையாண்டி மேளத்தை புக் செய்தனர். இந்தக் குழுவில் ஒரு பொடியனும் இருந்தான். ஆறாம் கிளாஸ் படிப்பது போல் இருக்கும் இவனுக்குள் இப்படி ஒரு இசைத்திறமையா எனப் பார்ப்பவர்களையே அவன் மூக்கில் விரல் வைக்க வைத்துவிட்டான்

  அதிலும் இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு பெரிய, பெரிய இசைக்கருவிகளும்,நவீன இசைக்கருவிகளும் அறிமுகம் ஆகிவிட்டன. இந்தப் பொடியன் சும்மா வேற லெவலில் நம் பாரம்பர்ய இசைக்கருவியான உருமி மேளத்தை வாசித்து அசத்துகிறான். இவனது இந்தத் திறமையைப் பார்த்து அனைவரும் மூக்கில் விரல் வைத்துவிட்டனர். அதுமட்டும் இல்லாமல், இணையத்தில் இந்த சிறுவனின் வாசிப்பை இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.