தமிழரின் வீரத்தை பறைசாற்றிய சிறுவன்… இப்போதெல்லாம் இந்த வண்டிகளை காண்பது அரிது… எப்படி அசால்ட்டா ஓட்டுகிறார் பாருங்கள்…!

பழங்காலத்தில் குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவற்றில் பிரயாணம் மேற்கொண்டனர். மாடுகள் இல்லாத வீடுகள் அந்த காலத்தில் குறைவு. விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் மாடுகள் பெருமளவு மனிதர்களின் வாழ்வில் இணைந்திருந்தன. இவற்றை தங்கள் குழந்தைகள் போலவும், வீட்டில் உள்ளவர்கள் போலவும் வளர்த்து வந்தார்கள்.

உனக்கும் எனக்கும் சம்திங்க் சம்திங்க்…… திரைப்படத்தில் நடிகர் பிரபு வீட்டில் நிறைய மாடுகளை வளர்ப்பார்கள் அவற்றிற்கு அசின், சிம்ரன், நமீதா என விளையாட்டாக நடிகைகளின் பெயரினை கொண்டு கஞ்சா கருப்பு கூப்பிடுவார். இவ்வாறு மாடுகளுக்கு செல்ல பெயரினை சூட்டி அதனுடன் இணக்கமாக இருப்பார்கள். மாடுகள் விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. நிலத்தை உழுவதில் இருந்து நெல் மணிகளை அறுவடை செய்வது வரை அவற்றின் பங்கு அளப்பறியது.

மாடுகள் வளர்க்கும் வீடுகளில் குழந்தைகள் கால்நடைகளுடன் மிகுந்த அன்புடன் பழகுவார்கள். குழந்தைகள் சொல் படி கால்நடைகளும் நடந்து கொள்ளும். இங்கே காணொலியில் சிறுவன் ஒருவன் மாடுகளை அசால்ட்டாக ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மறை மலை மாடுகளை ஓட்டி செல்லும் அந்த காணொலியை இங்கே காணலாம்