உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது…. வெறும் கால்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆடிய தப்பாட்டத்தை பாருங்க…..

தப்பாட்டம் என்பது நம் ஊர் கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களின் போதும் கோவில் வாகனகள் ஊர்வலத்தின் போதும் தப்பாட்டம் நடை பெரும் . இது நமது மூத்த குடிகளான பழந்தமிழர்களின் பாரம்பரியமான ஒரு வகை ஆட்டம் ஆகும். பறையை வைத்து இசை அமைத்து கொண்டே நடன கலைஞர்கள் அதற்கேற்ப நடனம் ஆடுவார்கள். இதில் பெண்களும், ஆண்களுக்கு நிகராக நடனம் ஆடுவார்கள்.

முற் காலங்களில் கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தம்மை காப்பதற்காக ஒலியை எழுப்பி அவற்றிடம் இருந்து தம்மை காத்துக்கொண்டனர். அரசர்கள் காலங்களில் பறையின் மூலம் அரசர்களிடமிருந்து வரும் செய்திகளை அந்த நாட்டில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தண்டோரா மூலம் அதாவது பறையில் இருந்து ஓசை எழுப்பி அரசர் கூறிய தகவல்களை ஒவ்வொரு கிராமமாக தெரியப்படுத்தினர். பாண்டியர்கள் மற்றும் சோழ மன்னர்களின் காலங்களில் பண்டிகைகளின் போதும் திருவிழாக்களின் போதும் பறையின் மூலம் இசை அமைத்து அதற்கு தகுந்தாற்போல் குழுவாக ஆடுவர்.

தற்போது உள்ள காலகட்டங்களில் தப்பாட்டம் ஊர் திருவிழாக்களிலும், அரசியல் நிகழ்ச்சிகளில், மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெரும்பாலும் நடத்தப்படுகிறது.

இங்கு காணொலியில் உள்ள கலைஞர்கள் உச்சி வெயிலில் சாலையின் ஓரத்தில் கால்களில் செருப்பு அணியாமல், சிறு சிறு சரல் கற்களையும் பொருட்படுத்தாமல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஆடும் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது. தமிழர்களின் பாரம்பரியமான தப்பாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.