அப்பாவுக்கு கொல்லி வைச்சேன்… மொட்டை போட்டேன்… 30 லட்சம் பேரை கண்கலங்க வைத்த பள்ளிக்கூட மாணவி..!

        அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

     பாசம் என்பது உறவுகள் மீது செலுத்தப்படும் உன்னதமான அன்பு.அதிலும் தந்தை_மகள் பாசம் அளவிடவே முடியாது. காரணம் பெண்குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோரை அவ்வளவு பொறுப்பாக பார்த்துக் கொள்வதுதான். அதேபோல் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அவர்களது அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும்.

  இங்கேயும் அப்படித்தான் பாக்கியராஜ் நடுவராக இருந்து வேந்தர் டிவியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் சந்திரிகா என்ற பள்ளிக்கூட மாணவி பேசிய பேச்சு, அனைவரையும் உடைந்து உருக வைத்தது. அப்படி அவர் என்ன பேசினார் எனக் கேட்கிறீர்களா? அந்த மாணவி, மேடையில் பேசும்போது, ‘எங்க வீட்டில் நானும், என் அக்காவுமா இரண்டு பிள்ளைங்க. எங்க அப்பா தறி ஓட்டப் போவாங்க. என்னோட அம்மாவும் சின்ன, சின்ன வேலைகள் பார்ப்பாங்க. ஒருநாள் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. ஆஸ்பத்திரிக்குப் போனோம். டாக்டர் செக் பண்ணிட்டு எத்தனை வருசமா தறி ஓட்டுறீங்கன்னு கேட்டார். எங்கப்பா பெருசா படிக்கல. சின்னவயசில் இருந்தே தறி ஓட்டுறேன்னு சொன்னாங்க. தறி ஓட்டி, ஓட்டி உங்க நுரையீரல் பாதிச்சுடுச்சு. 

  இனிமேல் தறி ஓட்டாதீங்கன்னு சொன்னாங்க. ஆனால் அப்பா இரண்டு பொம்பளை பிள்ளைங்களை வைச்சுட்டு எப்படி தறி ஓட்டாம வருமானம் வரும்ன்னு ஓட்டுனாங்க. கடைசியில் அப்பா இறந்தும் போயிட்டாங்க. சாக முன்னாடி என்னைக் கூப்பிட்டு, யாராச்சும் கொல்லி வைக்குறோம்ன்னு வடுவாங்க. நாளைக்கு சொல்லிக்காட்டுவாங்க. நீ தான் எனக்கு கொல்லிவைக்கணும்ன்னு சொன்னாரு. அப்பாக்கு கொல்லி வைச்சேன். மொட்டை போட்டேன். என் கூட பிறந்த அக்கா ஹீமோகுளோபின் இரண்டு பாயிண்ட் தான் இருந்துச்சு. திடீர்ன்னு மயங்கி விழுந்தாங்க. தினமும் 4 பாட்டில் ரத்தம் ஏத்துவோம். அவுங்களும் இறந்துட்டாங்க. இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியிலும் அம்மா என்னை படிக்க வைச்சாங்க!”என அந்த மாணவி மிகவும் உருக்கமாகப் பேசினார். 

 குறித்த இந்த வீடியோவை இதுவரை 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதோ அந்தக் காணொலி. நீங்களும் பாருங்கள். உங்களையும் அறியாமல் கண்கள் குளமாகிவிடும்.