டிரம்ஸை இப்படி அடிச்சு பார்த்திருக்கவே மாட்டீங்க… மிஸ் செய்யக் கூடாத வைரல் காட்சி இதோ..!

இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனச் சொல்லிவிடலாம். ஏன் நம்மை பார்த்தாலே படம் எடுத்து கொத்த வரும் பாம்பு கூட மகுடி இசையைக் கேட்டால் மெய்மறந்து நின்றுவிடும். அந்த அளவுக்கு இசைக்கு ரசிகர்கள் மிக அதிகம்! 

இசையை பல வகைகளில் வகைப்படுத்தலாம். நம் ஊரிலும் பாரம்பர்ய இசையான நாதஸ்வரம் தொடங்கி சிங்காரி மேளம் வரை பல இசைக்கருவிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி, டிரம்ஸ்இசைக்கு தனித்த ரசிகர்கள் பட்டாளம் உண்டு. டிரம்ஸ்இசையின் வசீகரத்தால் அதை விரும்பிக் கேட்கும் பலர் இருக்கிறார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒருவர் டிரம்ஸ் வாசிக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

டிரம்ஸில் என்ன விசேசம் என்கிறீர்களா? டிரம்ஸ் இசைத்துக்கொண்டிருப்பவர் திடீரென தன் தலையை தரையில் வைத்து அழுத்தி, ஜிம்னாஸ்டிக் செய்வது போல் உடலை வளைத்துக் கொண்டே இசையில் பட்டையைக் கிளப்ப்கிறார். இணையத்தில் இதுவரை இந்தக் காட்சியை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதோ உங்களுக்காக அந்த வீடியோ..

https://youtube.com/watch?v=l7peyP_eAaE