டாக்டரு இப்படி வைத்தியம் பார்த்து இதுவரை பார்த்திருக்கவே மாட்டீங்க… இப்படி ஒரு டாக்டர் கிடைச்சா ஆஸ்பத்திரியும் சொர்க்கம்தான்…!

    ஊசி என்றால் சின்னக்குழந்தைதான் பயப்படும் என்றில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால் அவர்களையும் அறியாமல் பயம் தொற்றிக்கொள்ளும். ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் மருத்துவர்கள் பலரும் சிகிச்சையையும் எளிமைப்படுத்தியது இல்லை. அவர்கள் நம்மிடம் நோய்குறித்து பேசும்போதே நம்மையும் அறியாமல் பயம் தொற்றிக்கொள்ளும்.

  பெரியவர்களுக்கு சிகிச்சைக் கொடுப்பவர்களுக்கே அவர்களுக்கு நோயின் தன்மையை விளக்கி சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைப்பது பெரியபாடு. அதேநேரத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுப்பது மிகவும் சவாலான விசயம். ஆனால் அந்த குழந்தைகளை குழந்தைத்தனமாகவே சிகிச்சை கொடுத்து அவர்களை அசத்துகிறார் ஒரு டாக்டர். 

   ராஜஸ்தான் மாநிலம், ஜோக்பூர் பகுதியைச் சேர்ந்த 71 வயது மருத்துவர்  ராஜ்க்வேதர் என்னும் மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்குவரும் குழந்தைகளுக்கு, குழந்தையைப் போலவே உற்சாகமாக நடனம் ஆடி, பாடல்பாடி சிகிச்சை செய்கிறார். குழந்தைகளும் அவரை மிகவும் ரசித்துப் பார்த்து சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. இதோ நீங்களே இந்த குழந்தைகளின் மனம் கவர்ந்த மருத்துவரைப் பாருங்கள்…