நடுரோட்டில் வித்தியாசமான ஆட்டம் போட்டு அசத்திய பெண்கள்… என்னம்மா ஆடுறாங்க பாருங்க…

   முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

    அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

   கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அப்படி என்றால் நடனத்தில் கலக்காமல் விட்டுவிடுவார்களா? இங்கே ஒரு ட்ரம்ஸ் இசைக்குழு சாலையோரம் இருந்து இசைத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அந்த ஏரியாவாசிகள் அனைவரும் ஆச்சர்யத்துடன் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில பெண்கள் டிரம்ஸ் இசைக்கு மயங்கி செம ஆட்டம் போட்டனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.