அம்மா எந்திரிம்மா… தாயின் தலையை தாங்கி பிடித்த சிறு குஞ்சு… காண்பவரை கண் கலங்க செய்யும் காட்சி..!

தாய் என்பது இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தேவை. தாயை போல் அன்பும், பாசமும், அக்கறையும் கொண்டு குழந்தைகளை அன்புடன் பாதுகாக்கும் உயிரினம் என்றால் அது தாய் மட்டுமே. குழந்தைகள் தாயிடம் மட்டுமே அதிகம் நெருக்கமாகவும், சுதந்திரமாகவும் இருக்கும். தான் பட்டினி கிடந்தாலும் தனது குழந்தைகள் வயிறார சாப்பிட வேண்டி உழைக்கும் தாய்மார்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கோழிகள் குஞ்சு பொரித்தவுடன் குஞ்சுகளை சிறகினில் வைத்து பாதுகாக்கும். குஞ்சுகளுக்கு இரையினை சாப்பிட கற்று கொடுக்கும். தான் சாப்பிட்டாமல் தனது குஞ்சுகள் சாப்பிட உதவி புரியும்.

மற்ற பறவைகள் அல்லது பருந்து போன்ற கோழிக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடிய பறவைகள் வந்தால் சாதாரணமாக அதிகம் பறக்க தெரியாத கோழி பல அடி தூரம் பறந்து பருந்து போன்ற பறவைகளை விரட்டும். அந்த நேரத்தில் எங்கிருந்துதான் அதற்கு பறக்கும் வலிமை வருமோ தெரியாது……குஞ்சுகளின் மேல் கொண்ட அன்பும் அக்கறையும் அவ்வாறு உந்தி தள்ளும். இது கோழிகள் மட்டும் அல்ல எல்லா விலங்குகளுக்கும் இது பொருந்தும்.

இந்த காணொலியில் அப்படி ஒரு தாய் கோழி இறந்ததை அறியாத சிறிய குஞ்சு ஓன்று தாய் கோழியின் அருகில் சென்று அதை எழுப்புவதற்கு முயற்சி செய்கிறது. இதை பார்க்கும் அனைத்து உள்ளங்களும் வருந்தம் கொள்ளும். கண்களைக் குளமாக்கும் அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .