அதிகமாக பகலில் தூக்கம் வருகிறதா? காரணம் இதுதான்.. இதை தெரிஞ்சுகிட்டு உடனே செக் பண்ணிக்கோங்க…!

    தூக்கம் தான் இந்த உலகில் மிகப்பெரிய வரம். என்னதான் கோடி, கோடியாக பணம் இருந்தாலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இங்கே பலர் உண்டு. தூக்கமாத்திரை போட்டால்தான் அவர்களுக்கு நித்திரை வரும். தூக்கம் அவ்வளவு விலைமதிப்புள்ளது. அந்தத் தூக்கத்தில் கனவு வராதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்.

  தூக்கத்தில் வருவதல்ல கனவு. நம்ம தூங்கவிடாமல் வருவதுதான் கனவு என்றார் அப்துல்கலாம். நம் ஆழ்மனக் கற்பனைகள் தான் கனவுகள் எனப்படுகிறது.அதேநேரம் நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் பலன் உண்டு. இரவுக் கனவு பலிக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்பார்கள். சிலர் எப்போதுமே பகலிலும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள்.

  தூக்கம் தான் மொத்த மனித உடலையும் அருமையாக இயக்கும் சக்கரம். தினமும் 8 மணி நேரம் சராசரியாகத் தூங்க வேண்டும். அப்போதுதான் மறுநாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். பொதுவாகவே அதிகம் தூங்குவதே நோய்களுக்கான வாசலை நாமே திறந்துவைப்பதுதான். அதிகம் தூங்கினால் நீரழிவு, இதயநோய், பக்கவாதம் என பலப் பிரச்னைகள் ஏற்படும்.

   ஒருவருக்கு அதிகமாக பகலில் தூக்கம் வந்தால் அவர் கவலை, மனச்சோர்வில் இருக்கலாம் என்று அர்த்தம். சில நேரங்களில் அதிக மருந்துகளை உட்கொள்வதும் பகல் தூக்கத்தை வரவழைக்கும். அதையெல்லாம் தாண்டி தூங்கிக் கொண்டே இருந்தால் சுகர், பிரசர், இதயநோய் போன்றவை இருக்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டியது அவசியமாகும்.