லட்சங்களில் செலவு செய்து நாயாக மாறிய மனிதர்.. உலகத்தில் இப்படியெல்லாம் கூடவா சம்பவங்கள் நடக்குது?

   இந்த உலகம் ஆச்சர்யங்களும், வினோதங்களும் நிறைந்தவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும். ஆனால் இங்கே ஒருவருக்கு வந்த ஆசை அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. அப்படி என்ன ஆசை என்று கேட்கிறீர்களா? அதைக் கேட்டால் அதிசயத்துப் போவீர்கள்.

   மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    பொதுவாகவே நாய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். அதனால் தான் பலரும் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் இங்கே ஒரு மனிதருக்கு தானே நாயாக மாற வேண்டும் என்னும் ஆசை துளிர்த்துள்ளது.

   ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகா என்னும் நபர்தான் அந்த ஆச்சர்யத்திற்குச் சொந்தக்காரர். அவருக்கு சின்ன வயதில் இருந்தே நாய் என்றால் கொள்ளைப் பிரியம். இதற்காக ஒருநாள் தன் குடும்பத்தையும், தன் யூடியூப் ரசிகர்களையும் கவர முழுக்க தன் கெட்டப்பையே நாயாக மாற்றியுள்ளார். இதற்கு மட்டும் 11 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார். இதற்கென்றே, ஸ்பெசல் எபெக்ட்ஸ் வொர்ஷாப் ஜீப்பெட் என்னும் நிறுவனம் இவருக்கு அக்மார்க் நாயைப் போலவே உடையைச் செய்து கொடுத்துள்ளது. 

  இந்த ஆடையை செய்ய மட்டும் முழுதாக ஒன்றரை மாதங்கள் ஆகியிருக்கிறது. டோகோவின் இந்த ஆசைக்காக நாயின் ரோமம் போன்றே, செயற்கையில் செய்யப்பட்டன. டோகோ நாய் கெட்டப்பில் தன் யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ட்விட்டரிலும் இந்தப்படம் வைரல் ஆகிவருகிறது.