பெற்ற குழந்தைகள் கூட இவ்வளவு உரிமையுடன் கூப்பிடமாட்டார்கள்… இந்த மைனா அம்மா, அம்மா என கூப்பிடும் அழகே தனி தான்… நீங்களே பாருங்கள்..!

பறவைகள் சுதந்திரமாக சுற்றி திரிவது அழகு. அவைகள் உணவு தேடி பல இடங்களுக்கு சென்று வருவது வாடிக்கையான ஓன்று. மனிதர்கள் தாங்கள் விரும்பும் விலங்குகளையும், பறவைகளையும் வீட்டில் வளர்ப்பார்கள். அதற்காக சிறிய கூண்டினையோ, சிறிய அறைகள் ஒதுக்கியோ அக்கறையுடனும், பாசத்துடனும் வளர்பார்கள். மேலும் சில முக்கியமான பழக்க வழக்கங்களை கற்று கொடுப்பார்கள். அந்த விலங்குகளும் வீட்டில் உள்ளவர்கள் கட்டளைப்படி நடந்துகொள்ளும். சில பறவை இனங்களையும் குறிப்பாக கிளி, மைனா, குருவி, புறா போன்ற பறவைகளையும் வளர்ப்பார்கள்.

குருவிகள் க்கீச்….க்கீச் ……என்று எழும்பும் ஓசை கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்பது போல் நாம் என்ன வார்த்தை உச்சரிக்கிறமோ அவ்வாறே கிளிகளும் பேசும். கிளி பேசுவதை கேட்கும் போது ஆச்சரியத்துடன் புன்னகையும் முகத்தில் பிரதிபலிக்கும். மைனா என்கிற பறவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பரவலாக காணப்படும். வயல்வெளிகளில் அறுவடைக்கு பின்னர் இந்த பறவைகளை அதிகமாக வயல்களில் காணலாம். சிதறிய நெல் மணிகளை உண்ணவாக உட்கொள்ள வரும்.

மைனா விலங்குகளை போன்று எடுத்துக்காட்டாக அணில் போன்ற விலங்குகள் எழுப்பும் ஓசைபோன்றே குரல் எழுப்பும். மேலும் பல விதமான ஓசைகளை எழுப்பும் திறமை கொண்டது. இவை பெரும்பாலும் கிழக்காசியா நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

இந்த காணொலியில் மைனா கொஞ்சும் தமிழில் அம்மா… அம்மாவென கூப்பிடும் அழகே தனி தான்.அதை நீங்களும் கண்டு களிக்கலாம்…. இந்த காணொலியில்…..