தாயை கண்டு கொள்ளாமல்,பாகனுடன் ஆனந்தமாய் விளையாடிய குட்டி யானை…

elephant-child-play-with-gaudian-fun

ஓடி விளையாடு பாப்பா ……ஓய்ந்திருக்க லாகாது பாப்பா…..என்று பாரதியார் குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் விளையாடினால் உடலுக்கு நல்லது, மூளைக்கும் நல்லது. பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அரை மணி நேரமாவது வெளியில் விளையாட வேண்டும், அப்போது உடலும், மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். பள்ளியில் குழந்தைகள் பள்ளியில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தை செலவிடுகிறார்கள். மேலும் அவர்களின் கவனம் முழுவதும் பாடத்தினில் இருக்கும்.

வீட்டிற்கு திரும்பியதும் சோர்வு போன்ற மனப்பாங்கில் இருப்பார்கள். அதற்கு அவர்களுக்கு சிறிது ஒய்வு தேவைப்படும். ஓய்வு என்பது மனதளவில் அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த கொஞ்ச நேரம் விளையாட விட்டால் உடலளவிலும், மனதளவிலும் அவர்கள் உற்சாகத்தோடு இருப்பார்கள்.

விளையாட்டு என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் செயல் மேலும் குழந்தைகளுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இவ்வாறு அவர்கள் விளையாடிய பின்னர் உணவருந்தி விட்டு படிக்க வைத்தால் உற்சாகமாகவும், வேகமாகவும், விரும்பியும் படிப்பார்கள். இதனால் தான் பாரதியார் குழந்தைகளின் மனநலனையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான இந்த பாடலை எழுதியுள்ளார். தற்போதுள்ள காலகட்டங்களில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டு பாடங்களை முடிபதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது……

இருப்பினும் கல்வியில் மேலும் கவனத்தோடு வேகமாக முடிப்பதற்கு உடலையும், மனதையும் உற்சாகத்தோடு வைத்துக்கொள்ள விளையாட்டு அவசியமானது……2கே-கிட்ஸ் விளையாட்டு என்றால் ஆன்லைனில் விளையாடுவது மற்றும் வீடியோ கேம் விளையாடுதல் போன்ற மனதிற்கும், உடலுக்கும் அழுத்தம் தர கூடிய விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் கல்வியில் நாட்டம் கொள்ளாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே விளையாடும் விளையாட்டுகளில் நிலை பெற்று வெளியில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பார்கள்.90-ஸ் கிட்ஸ்களுக்கு இந்த பாடலின் அருமை புரியும்……காலங்கள் மாறினாலும் குழந்தைகளின் உடல் நலனையும், மன நலனையும் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்…..

ஓடி விளையாடு என்ற பாட்டின் அருமை பெருமையை உணர்ந்த குட்டி யானை தன்னை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பாதுகாத்து வளர்க்கும் பாகனுடன் ஓடி விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…அந்த காணொலி காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…அதனை காணலாம்….

You may have missed