மீனவர் வலையில் சிக்கிய அதிசய உயிரினம்… என்னடா இது டிராகன் குட்டி மாதிரி இருக்கு, ஷாக்கான நெட்டிசன்கள்..!

நாம் நிலத்திலும், காடுகளிலும் இருக்கும் விலங்குகளைப் பார்த்திருப்போம். ஆனால் கடலுக்குள் இருக்கும் பல லட்சம் உயிரினங்கள் பற்றி நமக்கு தெரிவதே இல்லை. ஆழ்கடலுக்குள் மூழ்கிச் செல்லும் நீர் வாழ் ஆராய்ச்சியாளர்களுக்கும், மீனவர்களும் மட்டுமே அதை பார்த்து ரசித்திருக்கின்றனர். இங்கேயும் அப்படித்தான் ரஷ்யா நாட்டில் மீனவர் ஒருவரது வலையில் அதிசய மீன் இனம் ஒன்று சிக்கியிருக்கிறது. அதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் ரோமன் பெடோர்சோவ் இவர் நார்வே கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இவரது வலையில் வித்தியாசமான உயிரினம் ஒன்று சிக்கியது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அது டிராகன் குட்டி போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதற்குக் காரணம் இருக்கிறது.

அந்த உயிரினம் பெரிய சைஸ் கண்கள், ஒரு வால், பிங்க் நிறத்தில் உடல் அமைப்பு என டிராகனைப் போலத்தான் இருந்தது. ஆராய்ச்சியாளர்கள் அது சிமேரா ரக மீன் என கண்டுபிடித்துள்ளனர்.
ஆழ்கடலில் அடியில் வசிக்கும் இண்ட மீனை கோஸ்ட் சார்க்ஸ் என்றும் அழைப்பார்கள். குறித்த இந்த மீனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
