வெறும் வாயாலேயே நாதஸ்வர இசையைக் கொண்டு வந்த பொடியன்.. கிராமத்து சிறுவனுக்குள் இருக்கும் திறமையை பாருங்க..!

    இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது இங்கே ஒரு பொடியனுக்கு இருக்கும் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த சிறுவனுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். 

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும்,  சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.அதேபோல் கோயில் விசேசங்களுக்கும் முதலில் மேளக்கலைஞர்களையே புக் செய்வார்கள். கோயில் விசேசங்களிலுக்கு இசையை ரசிக்க வருபவர்களும் அதிகளவில் உண்டு. அதிலும் நாதஸ்வர இசைக்கு மயங்காதவர்களே யாரும் இல்லை எனச் சொல்லிவிடலாம். 

     இங்கேயும் அப்படித்தான்..ஒரு விசேச வீட்டிற்கு மேளக்காரர்கள் வந்து விட்டார்கள். அப்போது ஒரு பொடியன் நாதஸ்வரமே இல்லாமல், வெறுமனே தன் வாயில் மட்டும் கையை வைத்து மிகத் தத்ரூபமாக நாதஸ்வர இசையை நம் செவிகளுக்குள் கொண்டுவந்து நிறுத்துகிறார். அதிலும் செந்தமிழ் நாடென்னும் போதினிலே தொடங்கி பல பாடல்களை அவர் செம க்யூட்டாக வெறும் வாயாலேயே நாதஸ்வர இசையைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.