அப்பா வந்துட்டாங்க டிவிய ஆப் பண்ணு… திருட்டுத்தனதிற்கு உதவி புரிந்த 2k கிட்ஸ் டாக்..!

child-watching-tv-dog-save-from-father

மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு வந்ததும் கொறிக்க ஏதாவது சாப்பிடுவார்கள். அத்துடன் டிவி கார்ட்டூன் நிகழ்ச்சிகளை கொஞ்சநேரமாவது விரும்பி பார்ப்பார்கள். அவ்வாறு பார்த்தால் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பார்கள். அதன் பின்பே அவர்கள் பள்ளியில் கொடுத்த வீட்டு பாடங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். அதுவும் பெற்றோர் அருகில் இருக்க வேண்டும். கொஞ்சம் வேலை நிமித்தமாக நகர்ந்தாலும் அவர்கள் கவனம் விளையாட்டின் மேல் திரும்பிவிடும்…..

பெற்றோர்கள் குழந்தைகளின் வீட்டு பாடத்தினை கற்று கொடுத்துவிட்டு எழுத சொல்லி நகர்ந்தால் அவர்கள் தங்கள் விருப்பப்படி கிறுக்கி வைத்து விடுவார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைகள் எழுதி முடிக்கும் வரை அருகில் இருந்து கவனித்து கொண்டு இருப்பார்கள்.

இங்கே ஒரு சிறுமி வீட்டு செல்ல பிராணியான நாயுடன் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்க அவரது தந்தை வரும் சத்தம் கேட்டதும் நாயானது சிறுமிக்கு எச்சரிக்கை செய்கிறது. உடனடியான அந்த சிறுமி தொலைக்காட்சியை அணைத்து விட்டு இருக்கையில் அமர்ந்து தந்தை நுழையும் முன் வீட்டு பாடத்தினை எழுதி கொண்டிருக்கிறார். அவரது தந்தையும் அதை கண்டு கொள்ளாமல் உள்ளே செல்கிறார்.இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது…… சிறுமி தொலைக்காட்சி பார்க்க நாயும் தந்திரத்துடன் செயல் பட்டத்தை……….இணையவாசிகள் 90-ஸ் கிட்ஸ்களின் தந்திரத்தை 2k-கிட்ஸ்களும் பின்பற்றுகிறார்கள் என்று ரசிப்பதோடு வீட்டு செல்ல பிராணியும் அதற்கு உதவியதை எண்ணி இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்…..

You may have missed