தாயைப் பிரிந்த குட்டிப்பறவை… தாய் போல் பாசம் காட்டி வளர்க்கும் அணில்கள்.. என்ன ஒரு பாசம் பாருங்க..!

          அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்! பெற்றவர்களுக்கு மட்டும் தான் தன் பிள்ளைகளின் மேல் பாசம் வர வேண்டும் என்பது அல்ல. மற்றவருக்கும் கூட அவர்கள் மேல் தாய் பாசம் வருவதைப் பார்த்திருப்போம். 

  மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். 

  எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம்  பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

   இங்கே நம்மை சிலிர்க்க வைத்துள்ளது அணில்களின் தாய்ப்பாசம். தன் பிள்ளைகளின் மீது மட்டுமே ஆன பாசம் அல்ல. இங்கே அணில்கள் ஒரு பகுதியில் இருந்த போது, ஒரு குட்டிப்பறவை ஒன்று தவறுதலாகத் தன் தாயைப் பிரிந்து வந்துவிட்டது. இதை அணில்கள் பார்த்தன. அந்தக் குட்டிப்பறவை பசியாலும் துடித்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அணில்கள் தன் வாயில் உணவைக் கவ்வி வந்து, அதை அந்தக் குட்டிப்பறவைக்கு ஊட்டி விடுகிறது. இந்த தாய்ப்பாசத்திற்கு இணையே இல்லை. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.