என்னங்கடா… நிஜ யானையா… இல்ல பொம்மை யானையா… தந்ததை கழட்டி மாட்றீங்க.. ஆதங்கபட்ட நெட்டிஸின்கள்…!

elephant_thantham_vid_nzzz

யானைகள் கோவில்களில் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. காடுகளில் வாழும் யானைகள் மனிதர்களுடன் அதிக நெருக்கம் காட்டுவதில்லை . பாலுட்டி வகையை சேர்ந்த யானைகளில் மூன்று இனங்கள் மட்டுமே தற்போது இருக்கின்றன.ஆபிரிக்க யானைகள், இந்திய யானைகள் மற்றும் இலங்கை யானைகள். இவற்றில் ஆசிய யானைகளுக்கு காது பெரியதாக இருக்கும். இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால் அதற்கேற்ப காதுகளை கொண்டு காற்றில் வீசும் போது வெப்பம் தணிக்கப்படுகிறது. மேலும் அதிக வெப்பம் மற்றும் கோடைகாலங்களில் நீரை தும்பிக்கையின் மூலம் உறிஞ்சி உடல் முழுவதும் நனைத்து கொள்கிறது. தூசி அல்லது சகதியில் உருண்டு உடலின் மேல ஒரு வித சகதி போன்ற அடுக்கை உருவாக்கி வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்கிறது.

ஆபிரிக்க யானைகளை விட இந்திய யானைகள் உயரம் சற்று குறைவானதாக இருக்கும். ஆப்பிரிக்காவில் உள்ள ஆண் மற்றும் பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்கும். பெரும்பாலும் இந்தியாவில் இருக்கும் ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் அதிகமாக காணப்படுகிறது. யானையானது 136 கிலோ கிராம் உணவை எடுத்துக்கொள்கிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக 16 மணி நேரம் உணவிற்காக செலவிழிக்கிறது 160 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளும்.

அதிசயம் நிறைந்த யானையை ஒருவர் தந்தத்தை அதனுடைய வாய் பகுதியில் உள்ளே செலுத்தி பொருத்துகிறார். இதை பார்த்த நெட்டிஸன்கள் என்ன இவங்க பொம்மை யானை மாதிரி தந்தத்தை கழட்டி கழட்டி மாற்றுகிறார்கள் என ஆதங்கத்தோடு கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

You may have missed