அடேங்கப்பா புயல் காற்று எப்படி வந்து தாக்குது பாருங்க… இப்படி ஒரு புயலை யாரும் பாத்திருக்கமாட்டீர்கள்..!

புயல், காற்று, மழை, வெள்ளம், ஆழிப்பேரலை போன்ற இயற்கையை மிஞ்சிய சக்திகள் இந்த உலகில் எதுவுமே இல்லை. இந்த உலகில் இயற்கையை மிஞ்சிய சக்தியும் எதுவுமே இல்லை. இயற்கை பல அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டது.

என்னதான் இன்று விஞ்ஞானம் அசுர வளர்ச்சியடைந்து இன்று மழை பெய்யும், காற்று வீசும்…புயல் அடிக்கும் என தகவல்களை முன்கூட்டியே சொன்னாலும் அதைக் கட்டுப்படுத்தும் யுத்தி என எதுவும் நம்மிடம் கிடையாது. அந்தவகையில் இயற்கையே உலகில் பெரிய சக்தி. நம் முன்னோர்களான ஆதிமனிதர்களும் முதலில் இயற்கையைத்தான் தெய்வமாக வணங்கினார்கள்.

அந்தவகையில் இங்கும் வட இந்தியாவில் ஒரு கிராமத்தில் புயல் வீசுகிறது. அது தூரத்தில் இருந்து மெல்ல, மெல்ல நெருங்கி வருவதை ஒருவர் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த புயல் காற்று, வேகமாக நெருங்கி வருகிறது. வெளிச்சமாக இருக்கும் நிலப்பரப்பு படக்கென இருள் சூழ்ந்து கொள்கிறது. டூவீலர்களிலும், கார்களிலும் முகப்பு வெளிச்சம் போட்டே வாகனங்களை இயக்கும் சூழலை உருவாக்குகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.