தளபதி விஜய் பாடலுக்கு துளியும் ஆபாசம் இன்றி செம நடனம்… இந்த இளைஞனும், இளம்பெண்ணும் என்ன அழகாக ஆடுறாங்க பாருங்க..!

             இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான விஜய்….இப்போது விஜயின் அப்பா என தன்னை அறிமுகப்படுத்தும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

      நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள். இதில் விஜயின் மகளான திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் வீராங்கணையாவார். இப்போது அவரது மகன் வெளிநாட்டில் படிக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் மெகா ஹிட்டான படங்களில் திருப்பாச்சியும் ஒன்று. கடந்த 2005 ஆம் ஆண்ட் பேரரசு இயக்கத்தில் வெளியான திருப்பாச்சி படத்தில் அண்ணன், தங்கை செண்டிமெண்ட் வேற லெவலில் வொர்க் அவுட் ஆகியிருக்கும். இந்தப்படத்தில் த்ரிஷாவோடு சேர்ந்து விஜய் ஆடும் ‘அப்பன் பண்ண தப்புல…ஆத்தா பெத்த வெத்தல’ பாடலும் செம ஹிட் ஆனது. இந்தப் பாடலுக்கு ஒரு இளம்பெண்ணும், இளைஞரும் சேர்ந்து ஆடும் நடனம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். 

          முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார்.

                         இதேபோல் இப்போது ஒரு இளம் பெண்ணும், ஒரு இளைஞரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமலேயே தமிழ் கலாச்சாரப்படி   பாடலுக்கு நடனம் ஆடி ஆட்டத்தில் செம வைரல் ஆகிவருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பர்ய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது.

   ரவி வர்மன் என்ற இளைஞரும், புனிதா ஷாலினி என்ற இளம்பெண்ணும் சேர்ந்துதான் இந்த நடன வீடியோக்களை ஆடி வருகின்றனர். இணையத்தில் இவர்களது நடனம் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுவருகிறது. இவர்கள் கிராமத்துப் பிண்ணனியில் பாரம்பர்ய உடையில் செம நடனம் ஆடுகின்றனர். இணையத்தில் இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர். இதோ நீங்களே இவர்களது திறமையைப் பாருங்கள். அதிலும் அப்பன் பெத்த வெத்தல பாடலுக்கு கடுகளவும் கவர்ச்சி ஒன்றி செம மாஸாக ஆடுகின்றார்கள் பாருங்கள்…