எந்த ஊரு ஆத்தான்னு தெரியலையே.. கையில் சூளாயுதத்தத்துடன் செம ஆட்டம் போட்ட இளம்பெண்..!

     முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது. 

  இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் பலரும் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர். கல்லூரி விழாக்களிலும், உள்ளூர் மேடைகளிலும் ஆடுவது கூட ஓகே. ரசிக்கலாம் தான். ஆனால் இங்கே கோயிலிலேயே ஒரு பெண் செம ஆட்டம் போட்டிருப்பது இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது.

  கையில் சூளாயுதத்தை வைத்துக்கொண்டு, காவடி எடுத்து வருபவரோடு சேர்ந்து மாடர்ன் உடையில் இந்த அழகிய இளம்பெண் செம குத்தாட்டம் போடுகிறார். இலங்கையில் உள்ள கதிர்காமு முருகன் கோயிலில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனாலும் முருகன் கோயில் காவடிக்கு பீஸ்ட் அரபிக்குத்தையே ஓவர்டேக் செய்வது போல் இந்தப் பெண் செம மாஸாக ஆடியுள்ளார். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.