நடுரோட்டில் குஞ்சுகளுடன் தடுமாறிய நின்ற வாத்து.. காவலர் செய்த தரமான சம்பவத்தைப் பாருங்க..!

பாசமும், அறிவும் மனிதர்களுக்கு மட்டும் ஆனது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கு இணையாக சில நேரங்களில் பறவையினங்களும் கூட அறிவார்ந்தமாக இயங்குவதைப் பார்த்திருப்போம். இது அப்படியான ஒரு வாத்தின் சம்பவம் தான்!

வாத்துகள் மெதுவாக நடப்பதே மிக அழகாக இருக்கும். அதேபோல் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு தன்மையும் வாத்துக்கு உண்டு. அது நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. தண்ணீர் நிறைந்த குளத்திலோ, ஆற்றிலோ அது நீந்தி செல்வதே பார்க்க அழகாக இருக்கும்.

இங்கேயும் ஒரு வாத்து வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. வெளிநாட்டில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வாத்து ஒன்று தன் குட்டிகளை அழைத்துக் கொண்டு போனது. அப்போது ஒரு இடத்தில் சாலையைக் கடக்க வேண்டி இருந்தது. உடனே பிரதான சாலையைக் கடக்க முடியாமல், டிராபிக்கைப் பார்த்து வாத்து தடுமாறியது. இதைப் பார்த்த போக்குவரத்துக் காவலர் ட்ராபிக்கை நிறுத்திவிட்டு, வாத்து கடப்பதற்கு உதவுகிறார். இருந்தாலும், இந்த ட்ராபிக் போலீஸ்காரரின் மனசு ரொம்பப் பெருசுதான். வீடியோவைப் பாருங்களேன்.
Meanwhile in Paris.. ????
— Buitengebieden (@buitengebieden) June 26, 2022
???? IG: licsu pic.twitter.com/xWRIfKwkXN