தங்கை கல்யாணத்திற்கு அண்ணன் கொண்டுவந்து நிறுத்திய பரிசு… மொத்த குடும்பமும் கதறி அழுத காட்சி..
அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..
பாசம் என்பது உறவுகள் மீது செலுத்தப்படும் உன்னதமான அன்பு.அதிலும் தந்தை_மகள் பாசம் அளவிடவே முடியாது. காரணம் பெண்குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோரை அவ்வளவு பொறுப்பாக பார்த்துக் கொள்வதுதான். அதேபோல் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அவர்களது அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண்ணிற்கு அவரது அப்பா என்றால் கொள்ளைப் ப்ரியம். ஆனால் அவரது துரதிஷ்டம், அவரது திருமணத்தின் முபே பாசக்கார அப்பா இறந்துவிட்டார். இதனால் தன் தங்கை மிகவும் மனவேதனையில் தவிப்பதைப் பார்த்த அண்ணன் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். தெலுங்கானாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு ஹனிக்குமார் என்னும் மகனும், சாய் என்னும் மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு சுப்பிரமணியன் கரோனாவில் உயிர் இழந்தார். இந்நிலையில் தான் இப்போது சாய்க்கு, மதன் என்னும் வாலிபரோடு திருமணம் நடந்தது.சாய்க்கு தன் அப்பா இல்லையே எனக் கவலை துரத்த, அதை உணர்ந்த அண்ணன் ஹனிக்குமார், தன் அப்பா சுப்பிரமணியனை மெழுகுச் சிலையாக கொண்டுவந்து நிறுத்தினர். இதைப் பார்த்ததும் உணர்ச்சிப்பெருக்கில் கல்யாணப் பெண், சாய் கதறி அழுதார். மாப்பிள்ளை மதன் அவரது கரத்தை நெகிழ்ச்சியாக பற்றிக்கொள்ள இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.