நடிகர் யோகிபாபுவின் தங்கை எப்படி இருக்காங்கன்னு பாருங்க… அடடே இவ்வளவு நகைச்சுவையாக பேசுறாங்களே…

     செந்தில்_கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், புரோட்டா சூரி என தமிழ்த்திரையுலகில் காமெடியில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் கோலோச்சுவர். அந்த வகையில் இது யோகி பாபுவின் காலம்!

      யாமிருக்க பயமேன் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர் வெளியாகும் படங்களில் எல்லாம் திரையரங்கில் அவர் முகம் தெரிந்தாலே, ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுகின்றனர்.

     இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. அண்மையில் அஜித் நடிப்பில் சக்கைப்போடு போட்ட விஸ்வாசத்திலும் யோகி பாபு நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் 20 படங்கள் வந்தன. ஒருபக்கம் பக்காவான நகைச்சுவை ரோலில் நடிக்கும் யோகிபாபு, மற்றொருபுறம் பரியேறும் பெருமாள் போன்ற கலை, சமூக அக்கறை தாங்கிய படத்திலும் நாயகனுடன் படம் முழுவதும் ஜார்னி செய்திருப்பார். சமீபகாலமாக பல படங்களிலும் ஹீரோவாகவும் நடித்துவருகிறார் யோகி பாபு.

 இப்போது இணையத்தில் முதன் முதலாக யோகிபாபுவின் தங்கை செண்பகத்தின் பேட்டி வெளியாகியுள்ளது. இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் பெயர் நீலகண்டன். அவர் மீடியா முன்பு பேசவே மிகவும் தயங்கியபடி பேசுகிறார். பார்ப்பதற்கும் அச்சு, அசப்பில் யோகிபாபு போலவே இருக்கும் இந்த பெண் பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன். 

https://youtube.com/watch?v=mTIeZxILLqI