கொஞ்ச நேரம் அசதியில தூங்கிட்டேன்… அதுக்காக இப்படியாடா பண்ணுவீங்க… வீர முழக்கமிட்ட சிறுவன்…!
குழந்தைகள் என்றாலே அழகு தான். துரு….. துருவென…. கள்ளம் கபடமின்றி அங்கும்….. இங்கும்….. ஓடி கொண்டே எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது கடினமான காரியம். ஆனால் அவர்கள் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கும்.
குழந்தைகள் இருக்கும் வீடுகள் எப்போதும் கலகலப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். அவர்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. நடக்க ஆரம்பித்ததும் அங்கும் இங்கும் ஒடி கொண்டே இருப்பதோடு இல்லாமல் கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து கீழே போட்டு உடைப்பது, அதை வேறு இடத்தில் கொண்டு வைப்பது என அவர்கள் செய்யும் லீலைகளை சொல்லி மாளாது ……
குழந்தைகளுக்கு தண்ணீர் என்றால் கொள்ளை பிரியம் தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பாத்திரங்களையோ அல்லது நல்லியையோ திறந்து வைத்து கொண்டு அதில் ஆனந்தமாக விளையாடி மகிழ்வார்கள். இந்த காலகட்டங்களில் எப்போதும் பெரியவர்கள் ஒருவர் குழந்தைகள் அருகிலேயே இருக்க வேண்டும்.
இங்கு ஒரு குழந்தை சிறிது தூங்கி எழுவதற்குள் அவருடைய பெற்றோர் அவரை அலங்கரித்து வைத்தனர். தூங்கி எழுந்ததும் வீர நடை நடந்து நான் தூங்கிய சிறிது நேரத்திற்குள் இவ்வாறு அலங்கரித்தது யார் என கோபமுடன் கேட்பது போல் தெரிகிறது…….வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அந்த காணொலியை இங்கே காணலாம்..