இந்த தமிழ் பாட்டு இல்லாத திருமண டான்ஸ் கேரளாவில் இல்லவே இல்லையாம்.. 6 மில்லியன் பார்வையளர்களை கொள்ளை கொண்ட காணொளி..!

mapatiyan_song_dance_mz

திருமணத்தை திருவிழாக்கள் போல் கொண்டாடுவது சமீப காலமாக ட்ரெண்டாகி வருகிறது. இதனை இந்த தலைமுறையினர் கொண்டாடி வருவது இன்னும் சிறப்பு. வாழக்கையில் நாம் என்றும் நினைவில் வைக்கும் நிகழ்ச்சிகளில் திருமண நாளும் ஓன்று. காலங்கள் சென்ற பின் நம்மை நாம் நினைவுபடுத்தும் நிகழ்வுகளில் திருமண வீடியோக்கள், புகை படங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு வித ஸ்டைல் இருக்கும். அதை பரவலாக அனைவரும் பின்பற்றுவர். சமீபகாலமாக திருமணத்தில் ஆடல் பாடலுடன் திருமண அரங்கை மட்டும் இல்லாமல் இணையத்தை அதிரவைக்கும் திருமண வைபவங்கள் நடந்தேறி கொண்டிருக்கின்றன. டான்ஸ் குழுவோடு மணமகன் மற்றும் மணமகள் வருகை தருவதோடு அவர்களும் நடனம் ஆடி ஊரரையும், உறவினர்களையும் வாய் பிளக்க வைக்கின்றனர்.

இங்கு ஒரு திருமண வைபவத்தில் தொட்டதெல்லாம் தூள் பறக்கும் மம்பட்டியான்…… பாடலுக்கு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஆட்டம் ஆடி அதிர வைத்துள்ளனர். இந்த பாடல் ஒரு கோடி பார்வையாளர்களையே தாண்டி இருக்கிறது ஆனால் இந்த திருமண ஆல்பத்தில் இந்த பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வைரல் ஆகி வருகிறது. இதற்கு காரணம் இந்த திருமண ஆல்பத்தில் நடனம் ஆடியவர்கள். குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெற்று கலகலக்கலாக ஆடி அதிர வைத்திருக்கின்றனர். மேலும் கேரளாவில் இந்த மம்பட்டியான் பாடல் இல்லாத திருணமன நிகழ்ச்சிகள் இல்லையாம். இணையத்தை கலக்கி வரும் அந்த திருமண ஆல்பம் பாடல் இதோ …..

You may have missed