அழகு தமிழில் கொஞ்சி பேசி அசத்தும் கிளி.. பல லட்சம் மக்கள் பார்த்து ரசித்த காணொளி..!

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது.நாம் எதை சொல்லிக்கொடுத்தாலும் அதை திரும்பிப் பேசும் ஆற்றல் கிளிக்கு உண்டு. கிளி அப்படி பேசுவதன் நீட்சி தான் காலப்போக்கில் மொபைல் போனிலேயே டாக்கிங் டாம் என கேமாக வந்தது.

மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும். வீட்டில் அதனாலேயே கிளி வளர்ப்பவர்கள் அதிகம். பல வீடுகளிலும் செல்லக்குழந்தை போலவே கிளிகள் வளர்வதையும் பார்த்திருப்போம்

இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி ஒன்றை வளர்க்கிறார். அந்த கிளி அழகுத்தமிழில் பேசி அசத்துகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் கிளி வளர்க்கும் அந்த பெண் கேட்கும் கேள்விக்கெல்லாம் மிக ஷார்பாக பதில் சொல்கிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த இளம் பெண் தன் தலைக்கு மாட்டும் க்ளிப்பைக் கேட்கிறார். அதையும் எடுத்துக் கொடுக்கிறது. இந்த கிளியை நிச்சயம் சுத்திப் போடத்தான் வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.