இந்த உலகத்திலேயே இவங்க தான் கொடுத்துவைத்த மருமகள்… வீடியோ பாருங்க.. அப்புறம் நீங்களே சொல்லுவீங்க..!


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.

திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். திருமணம் என்பது கலாச்சாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகும். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என எந்த மதத்தினராக இருந்தாலும் தங்கள் கலாச்சாரப்படி திருமணம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

ஆனால் திருமண பந்தத்தில் பொதுவாகவே மணப்பெண் வீட்டார் தான் மாப்பிள்ளைக்கு நகை, பணமெல்லாம் போட்டுத் திருமணம் செய்துகொடுப்பார்கள். அதுதான் உலக நடைமுறையாக இருக்கிறது. ஆனால் இங்கே ஒரு மணப்பெண்ணுக்கு அள்ளிக்கொடுத்து மாப்பிள்ளை வீட்டார் அன்பால் திக்கு முக்காட வைத்துவிட்டார்கள். அப்படி என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? மணப்பெண்ணை முதன் முதலாக மாப்பிள்ளையோடு வீட்டுக்கு அழைத்து வந்தனர். வழக்கமாக இப்ப்டி வரும்போது மருமகளே..மருமகளே வா..வா பாடல் தான் ஒலிக்கும். ஆனால் இங்கே கொஞ்சம் வித்தியாசமாக அதற்குப் பதிலாக மணப்பெண் மாடியில் இருக்கும் தன் வீட்டில் ஏறும் ஒவ்வொரு படிக்கும், கட்டுக் கட்டாக பணம், வெள்ளி பொருள்களை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கின்றனர். உண்மையிலேயே இவர் ரொம்ப கொடுத்து வைத்த மருமகள் தான்..இதோ நீங்களே வீடியோவைப் பாருங்கள்.