திருமண நிகழ்ச்சியில் ரொமான்டிக்கா ஆட முயன்று பல்பு வாங்கிய தம்பதிகள்…. கலாய்த்து தள்ளிய இணையவாசிகள்.

wedding-photo-shoot-fails-india

திருமணம் நடக்கும் தம்பதிகளுக்கு அன்று நடக்கும் நிகழ்வுகள் காலம் முழுதும் ஞாபகத்தில் இருக்கும். உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரார் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெறும் திருமண நாள் அன்று வாழ்த்துக்கள், ஆசீர்வாதம் என மணமக்களின் மகிழ்ச்சியை காண அனைவரின் கண்களும் புதுமண ஜோடிகள் மேல் மொய்க்கும்.

சமீபத்திய திருமண வைபவங்களில் நடைபெறும் சுவாரசியமான நிகழ்வுகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமணம் நடைபெறுவதற்கு முன்னும், திருமணம் நடைபெற்ற பிறகும் சடங்குகள், சம்பிரதாயங்களோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல் நடன கலைஞர்களுடன் மணமக்கள் நடனம் ஆடி பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைக்கின்றனர். அப்படி ஒரு திருமண தம்பதிகள் ஆச்சர்யா பட வைக்க முயற்சிக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது……

திருமண மேடையில் மணமக்கள் சுழன்று சுழன்று……ஆட அவர்களின் சுழற்சிக்கு ஆடையானது குறுக்கே தடையாக வர மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நிலை தடுமாறி கீழே சரிந்தனர். படத்தில் தான் மணமகன் மணமகளை கீழே விழாமல் அலேக்காக தூக்குவார். ஆனால் நிஜத்தில் அவ்வாறு நடப்பதில்லை….நிலைதடுமாறி சரிந்த ஜோடிகளை இணையவாசிகள் நகைச்சுவையுடன் கருத்துக்கள் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்….

You may have missed