குழந்தையோடு குழந்தையான ஜல்லிக்கட்டு காளை… பாசத்திற்கு கட்டுப்பட்டு செஞ்ச செயலை பாருங்க..!

ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படும் தமிழரின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக பண்டைய காலம் தொட்டே….. தை மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. வீரர்கள் மாட்டினை அடக்குவதற்கென்றே பயிற்சிகள் பெறுவார்கள். மேலும் இவர்கள் கபடி விளையாடி தங்களை தயார்படுத்தி கொள்வார்கள்….

காளை மாடுகளுக்கும் மாட்டினை வளர்பவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாட்டினுடைய திமிலை அடக்குவதன் மூலம் வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஒரு மாட்டினுடைய திமிலை ஒருவர் மட்டுமே அடக்க வேண்டும், இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் மாட்டினை அடக்க முயற்சித்தால் அதற்கு புள்ளிகள் வழங்கப்படுவதில்லை. மேலும் காளையினுடைய திமிலைத்தவிர மற்ற பாகங்களை தொடுவதற்கு அனுமதிகள் இல்லை. கழுத்து மற்றும் வால் போன்ற உறுப்புகளை பிடித்தால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். ஜல்லிக்கட்டுகளை பண்டைய காலம் தொட்டு மக்கள் பின் பற்றி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் சான்றாக மதுரை அருகே பழங்கால குகை ஓவியத்தில் காளையை ஒரு தனி மனிதன் அடக்குவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டதாக தகல்வல்களை நாம் அறியமுடிகிறது.

சுமார் 130 நாட்டு மாடு இனங்கள் தமிழர்களின் பொக்கிஷமாக இருந்தவை காலத்தால் அழிக்கப்பட்டு தற்போது 28 இனங்களாக சுருங்கி விட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் நமது பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதுடன் நம்முடைய காளைகளும் பாதுகாக்கப்படும். காளைகள் விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்டு வந்த நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியால் விவசாயிகள் காளை மாட்டை வளர்ப்பதற்கு பதிலாக ட்ராக்ட்டர் வாங்கி விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள். மேலும் தற்போது ஜல்லிக்கட்டிற்காக மட்டுமே காளைகள் வளர்க்கப்படுகிறது. காளைகள் வளர்ப்பது குறைந்து போனால் நம்மூர் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாய பணிகளை மேற்கொள்ளவதற்கும் பால் உற்பத்தி செய்வதற்கும் என அனைத்திற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவோம்….

நம்மூரில் விளைந்த நெல்மணிகளையும், நவதானியங்களையும், பழங்களையும், நாட்டு பாலையும், எருதின் உரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த ஆரோக்கியமான பழந்தமிழர்கள் கால மாற்றத்தால் அனைத்தையும் தொலைத்ததோடு ஆரோக்கியத்தையும் தொலைத்து வீரத்தின் வெளிப்பாடாக திகழும் ஜல்லிக்கட்டிற்காக நம் பாரம்பரிய காளைகளை மீட்டெடுத்துள்ளோம்……மண்வாசனை மாறாமல் குழந்தையும்,காளையும் அன்பாக கொஞ்சி விளையாடும் தமிழரின் வீரத்தையும், அன்பையும் மெய்ப்பிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது…..அந்த காணொலியை இங்கே காணலாம்….