காந்தார படத்தின் வடிவமைப்பை போன்றே… நம்மூர் குலசாமியின் தரிசனத்தை தத்ரூபமாக வடிவமைத்த கலைஞர்… அதிசயித்து பார்த்த இணையவாசிகள்…!

‘எ டிவைன் ப்ளாக்பஸ்டர்’ என்று இந்திய மக்களால் கொண்டாடப்படும் காந்தார படம் இந்தியா முழுக்க அனைத்து மக்களாலும் விரும்பி பார்க்க பட்ட படம். மேலும் அந்த படத்தில் வரும் காட்சிகள், கதை மற்றும் இசை போன்ற அனைத்து நிகழ்வுகளும் இந்தியாவின் கிராமங்களில் உள்ள குலசாமி கோவில்களில்…..திருவிழாக்களில் நடக்கும் நிகழ்வுகளுடன் ஒத்து போனது. இந்தியா மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம், நம்பிக்கை, இயற்கையை கொண்டாடும் நம் திருவிழாக்கள், பண்டிகைகள் அனைத்தும் இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருக்கும் மக்களின் வாழக்கையில் பின்னி பிணைந்தவை.

கன்னட மொழியில் வெளிவந்த இந்த படம் இந்திய அளவில் மக்கள் அனைவருக்கும் பிடித்த படமாக அமைந்தது. படத்தில் வரும் ராகத்தை இளைஞர்களையும் முணுமுணுக்க வைத்தது.கன்னடத்தில் வெளிவந்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழயில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. `16′ கோடியில் தயாரிக்க பட்ட படம் தற்போது வரை 306 கோடிக்குமேல் வசூலித்து வருகிறது.

‘கோவில் இல்லா ஊரில் குடிபுக வேண்டாம்’ என்று கூறுவார்கள் பெரியோர்கள். கிராமங்கள் மற்றும் ஒவ்வொரு ஊரிலும் கோவில்கள் இருக்கும், மேலும் குலசாமியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இருக்கும், அந்த கோவில்கள் மற்றும் குலசாமிக்கு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ திருவிழாக்கள் குடும்பத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் சேர்ந்து நடத்துவார்கள். அப்போது தெய்வங்களை மிக அழகாக அலங்காரம் செய்து வடிவமைத்திருப்பார்கள், அதை காணும் பக்கதர்களுக்கு தெய்வம் நேரில் வந்து காட்சியளித்தது போல் உணர்ச்சி வசப்படும் அளவிற்கு தத்துரூபமாக இருக்கும். அந்த காட்சியை இந்த காணொலியில் கண்டு களிக்கலாம்…..