பாவாடை தாவணியில் இயற்கை சூழலில் ஆட்டம் போட்ட அழகிய பெண்கள்.. என்ன அழகான நடனம் பாருங்க…!

   முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

    அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

  பெண்கள் இப்போதெல்லாம் சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுவது பேஷன் ஆகிவிட்டது. ஒருவகையில் அதற்கு ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரிலும் காரணம். அந்தவகையில் இப்போது ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற கனா காண்கிறேன்..கனா காண்கிறேன் கண்ணாளனே என்னும் பாடலுக்கு பத்மா ஷாலினி, ப்ரவீனா உன்னி என்னும் இருபெண்கள் செம க்யூட்டாக ஆட்டம் போடுகின்றனர். நம் பாரம்பர்யமான உடையில் அவர்கள் இயற்கையான தோட்டப் பிண்ணனியில் ஆடும் ஆட்டம் இணையத்தில் 17 லட்சம் பேரின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன். 

You may have missed