யாருப்பா இந்தப் பாட்டி? என்ன ஆட்டம் போடுறாங்க பாருங்க… வாழ்க்கையை எப்படி ரசிச்சு வாழுறாங்க பாருங்க…!

         சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். அதை உண்மைதான் எனச் சொல்லும் அளவுக்கு பாட்டி ஒருவர் ஒரு செயல் செய்து இருக்கிறார். குறித்த அந்த செயல் இணையத்தில் செம வைரலாக பரவிவருகிறது.

   திறமை என்பதை வயதைப் பொறுத்த விசயமே இல்லை. யாருக்குத் திறமை இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதேபோல் வாழ்வை ரசனையோடு வாழ்வதே பெரிய கலை. அனைவருக்கும் அது வாய்த்து விடாது. சிலர் சதா சர்வ நேரமும் தன் கஷ்டங்களை நினைத்துப் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் வாழ்வை ரசனையோடு வாழ்வதே கிடையாது. ஆனால் எல்லா கஷ்டத்தையும் ஊதித்தள்ளிவிட்டு சிலர் வாழ்வை ரசனையோடு வாழ்வார்கள்.

  இந்த பாட்டியும் அப்படித்தான். ஒரு திருவிழாவில் ஸ்பீக்கரில் பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த பாட்டி ஒருவர் செம க்யூட்டாக ஆட்டம் போட்டு கலக்கினார். இதோ நீங்களே பாருங்களேன். இப்படியொரு ரசனையான வாழ்வு கிடைத்தால் அதற்கு எதுவுமே இணை கிடையாது. இதோ அந்த வீடியோ…