இந்த வயசுல இவ்வளவு ஸ்டைலா… மைக்கேல் ஜாக்சன் போல் ஆடி இணையத்தை கலக்கிய மனிதர்..!

theru-dance-make-fun-vid-nzz

திறமைகள் கொண்ட மனிதர்கள் அவர்களுக்கு அமையும் சூழ்நிலைகளால் வெளியுலகிற்கு தெரியாமல் இருகின்றனர். ஒரு சில மனிதர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு முட்டி மோதி விடாமுயற்சியுடன் போட்டி போட்டு வெற்றி பெறுகின்றனர்.ஒவ்வொரு மனிதற்குள்ளும் ஒரு அசாத்திய திறமை இருக்கும். அதனை அவர்களே அறியாமல் இருப்பார்கள். உடன் இருக்கும் நண்பர்கள்,உறவினர்கள், பெற்றோர்கள் அதனை கவனித்து அவர்களை ஊக்கப்படுத்துவார்கள். ஒரு சிலமனிதர்களால் குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால் தங்கள் திறமைகளை கவனத்தில் கொள்ளாமல் தங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளை கருத்தில் கொண்டு குடும்பத்திற்காக உழைக்கும் நல் உள்ளங்கள் காலப்போக்கில் தங்கள் திறமைகளை மறந்து விடுகின்றனர்.

திறமைகள் இருக்கும் அனைவரும் சாதித்து விடுவதில்லை. வெற்றி பெற்ற பலரின் பாதைகளில் நிறைய அவமானங்கள், வலிகள், வேதனைகளை கடந்து வந்திருப்பார்கள். சில குழந்தைகள் சிறு வயதில் தனித்துவமான திறமைகள் அமைய பெற்றிருந்தாலும் அதற்கான வழிகாட்டிகள் இல்லாமல் தங்கள் இலக்குகள் மற்றும் குறிக்கோளை தவற விடுகின்றனர்.

அர்ஜுனனுக்கு ஒரு நல்ல குரு துரோணாச்சாரியார் கிடைத்தது போல், ஏ.பி.ஜே.அப்துல் கலாமிற்கு கிடைத்த ஆசிரியர் முத்து ஐயர் போன்று நல்ல ஆசான்கள் கிடைத்தால் ஒவ்வொரு மாணவனும் வாழ்வில் வெல்வது உறுதி. கல்வியறிவு மட்டும் இல்லாமல் பாட்டு, இசை, நடனம், சமையல் கலை, ஓவியம் தீட்டுதல் போன்ற பல திறமைகள் ஒவ்வொரு திறமையும் மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும்.அவற்றை கண்டு பிடித்து திறமைகளை வளர்ப்பது பெற்றோரின் கடமை. மைக்கேல் ஜாக்சன் உலகம் போற்றும் நடனக் கலைஞர், உலகம் முழுக்க இவரது நடனத்தை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மூன் வாக் போன்ற வித்தியாசமான நடனத்தை வேகமாக ஆடுவதில் வல்லவர். தற்போது BTS என்ற கொரியன் K-பாப் உலகம் முழுக்க ரசிகர்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர்.

நம் இந்தியாவில் சாலையில் வயதான இரு சிட்டிஸன்கள் மைக்கேல் ஜாக்சன் நடனத்தை இந்த வயதிலும் மிக நேர்த்தியாக நடனம் ஆடி இணையத்தை புரட்டி போட்டுள்ளனர். இவர்களுக்கும் அந்த காலத்தில் நடனம் ஆட வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர்களும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸனாக புகழ் அடைந்திருப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்…

You may have missed